Saturday, July 30, 2011

காலத்திற்கு ஒரு கடிதம்

Posted by sasi at 1:07 AM 1 comments
காலத்திற்கு ஒரு கடிதம்...

ஏ  காலமே
ஏன் என் மீது
உன் சவுக்குகளையே
சொடுக்குகிறாய் ?

நான் வலிகொண்டு
அலறும் போதெல்லாம்
நீ ஆனந்த புன்னகை
புரிகிறாய்

நானறிந்தேன்...

வலி கொடுத்து
வலி கொடுத்து
எனக்கு
ஞான ஒளி கொடுக்கிறாய்

எது எது கேட்டேனோ
அது அதை நீ  தரவே இல்லை
எது எது மறுத்தேனோ
அது அதை நிறைய நிறைய
கொடுக்கிறாய்

நானறிந்தேன்...
அழிகின்றதை எல்லாம்
நான் பட்டியலிட்டு இருந்தேன்
நீயோ
அழியாத ஒன்றை
வாரி வழங்கி விட்டாய்

இன்பங்களையே
நீ கொடுத்து இருந்தால்
நான் போதை பித்தேறி
பிரபஞ்சமே நானென்று
ஆணவ கூரையேறி
கூவி இருப்பேன்

நீ கொடுத்த
துன்பங்களின் பாடங்களால்
பிரபஞ்சத்தில்
நானொரு புள்ளியென்று
இதயத்தில்
ஒளி கொண்டு விட்டேன்

இது
துறவியென்று
திரிகின்றவனுகெல்லாம்  கூட
கிட்டாத யோகம்

மனித இயந்திரமாய்
இறுகி போகாமல்
என்னையொரு
பூவாய் மலர்த்திய
காலமே...
உனக்கு நன்றிகள்  கோடி

Thursday, July 28, 2011

ஒரு கேள்வி

Posted by sasi at 9:28 PM 0 comments


நிறைவு

Posted by sasi at 9:27 PM 0 comments


சுத்தம்

Posted by sasi at 9:26 PM 0 comments


நகல்

Posted by sasi at 9:22 PM 0 comments


பேருண்மை

Posted by sasi at 9:20 PM 0 comments


Sunday, July 24, 2011

பாதை

Posted by sasi at 9:54 PM 1 comments


Friday, July 15, 2011

கோமாளிகள்

Posted by sasi at 9:32 PM 3 comments

Sunday, July 10, 2011

ஒன்றாதல்

Posted by sasi at 9:23 PM 2 comments

சும்மா

Posted by sasi at 9:21 PM 0 comments

Tuesday, July 5, 2011

மனசு

Posted by sasi at 12:35 AM 0 comments
 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea