Wednesday, June 17, 2020

இம்சை இரவுகள்

Posted by sasi at 1:25 AM 0 comments












காதலுற்று
பெருகித் தொலையும் இரவு

கடனுற்று
அருகித் தொலையும் இரவு

கனவுற்று
உருகித் தொலையும் இரவு

காமமுற்று
கருகித் தொலையும் இரவு

நோயுற்று
இருமித் தொலையும் இரவு

பயமுற்று
மருகித் தொலையும் இரவு


ஆளுக்கொரு விதமாய்
வகைக்கொரு ஆயுதமேந்தி
எம்மை இம்சிக்கும்
இரவுகளே
இரவுகளே
கொஞ்சம் தூங்கித் தொலைவீர்

sasiboojium.blogspot.com







 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea