
காதலுற்று
பெருகித் தொலையும்
இரவு
கடனுற்று
அருகித் தொலையும்
இரவு
கனவுற்று
உருகித் தொலையும்
இரவு
காமமுற்று
கருகித் தொலையும்
இரவு
நோயுற்று
இருமித் தொலையும்
இரவு
பயமுற்று
மருகித் தொலையும்
இரவு
ஆளுக்கொரு விதமாய்
வகைக்கொரு
ஆயுதமேந்தி
எம்மை
இம்சிக்கும்
இரவுகளே
இரவுகளே
கொஞ்சம்
தூங்கித் தொலைவீர்
sasiboojium.blogspot.com
sasiboojium.blogspot.com
0 comments:
Post a Comment