இன்று பகலிலோ
இன்று இரவிலோ
நாளையோ
நாளை மறுநாளோ
அதற்கு
பிறகோ....
ஜனிக்கலாம்
ஒரு
மெலிய காற்றில்
மலரொன்று
மலர்வதைப் போல
ஒரு
கவிதை
அல்லது
மரணிக்கலாம்
ஒரு
வலிய காற்றில்
மரமொன்று
வீழ்வதைப் போல
ஒரு
கவிதை
உலகெல்லாம்
கொட்டி கிடக்கும்
கோடானு
கோடி
அற்ப
கவிதைகளில்
ஒன்று
மலர்ந்தாலென்ன ?
ஒன்று
மறைந்தாலென்ன ?
0 comments:
Post a Comment