Thursday, May 21, 2020

அக்கினி வெயில்

Posted by sasi at 4:20 AM

அக்கினி வெயிலே….
தாகத்தில்
தொண்டை வரண்டு
தேகத்தில்
வெக்கை மிகுந்து
தீப்பிடித்து திரிகிறோம்
தெருவெங்கும்
வெப்ப சரம் தொடுக்கிறாய்
மேனியெங்கும்

கத்தரி வெயிலே...
கடும்  வெயிலே...
எகிறும் விலைவாசியாய்
வருடா வருடம்
நீ ஏறிக் கொண்டே போகிறாய்
நெருப்பில் காகிதமாய்
நாம்
கருகிக் கொண்டே போகிறோம்

பூமியின் ஈரமெல்லாம்
உறிஞ்சிக் குடித்தாய்
எங்கள் தாகத்திற்கு
எங்கே நீரை வைத்தாய்

சுடுஞ் சூரியனே...
பூமி கெடுத்த
மானுட தவறுக்கு
பழி தீர்க்கும் பருவமா
கோடை உமக்கு ?

தீயாய் தாக்கும்
உன் கிரணங்களால்
பூவாய்ப் பொசுங்கும்
பூமி

பூப்போன்ற பூமி மீது
தீப்போன்ற கோபம்
முறையா ?

கோடைக் கோபம்
வேண்டாம்
வாடைக் காதலைக்
கொண்டா ?

உச்சி வெயிலாய்
உரசாதே
அதிகாலையாய்த் தழுவு

பூமி மீது
ஈர மேகங்களை
இறக்கு
கொஞசம்
மழைக் கருணை
காட்டு














sasiboojium.blogspot.com

0 comments:

Post a Comment

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea