எளிய மனிதர்களோடு
ஏனிந்த மழை யுத்தம் ?
இயற்கை கெடுக்கும்
மனிதத் தவறு
மகாத் தவறு
எம்மை தண்டிக்க
நினைத்தாயோ ?
தண்ணீரில் நனைத்தாயோ ?
நீ ஊதித் தள்ளினாலே
நாமளிவோம்
எம்மை மோதித் தள்ளவா
புயல்களை ஏவினாய் ?
இரண்டாயிரத்து இருபதே....
கொரானா தொடங்கி
புரெவி வரை
எத்தனை அஸ்திரங்கள்....
கோடானு கோடி
மனிதக் கைகளால்
அறைந்து முடித்தாலும்
இயற்கை நின்று சிரிக்கும்.
இயற்கையின் ஒற்றைக் கை
ஓங்கி அறைந்தால்
மானுடம் மொத்தம்
அடையாளமின்றி மரிக்கும்.
ஏ... வலிய இயற்கையே !
நிராயுதபாணி
எம்மை விட்டுவிடு
உன் கோபத்தை கொஞ்சம்
குறைத்து விடு
பூமியில்...
எம்மை வாழவிடு.
sasiboojium.blogspot.com

0 comments:
Post a Comment